முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர் பகுதியில் முல்லைத்தீவு வீதியில் அமையப்பெற்ற பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிளை இன்று (17) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு கிளையின் பொது முகாமையாளர் எஸ்.சுஜீபனு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கையின் பிரதேச அபிவிருத்தி வங்கி தவைவர் ஏ.பி.லசந்த பெர்ணன்டோ அவர்களும் வங்கியின் பொதுமுகாமையாளர்கள்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ஆர்.விஜயகுமார்,முல்லைத்தீவு மாவட்ட சமூர்த்தி உதவிப்பணிப்பாளர் திருமதி.கேகிதா இராணுவ அதிகாரி,பொலீஸ் அதிகாரி மற்றும் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு திறப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இலங்கையின் பிரதேச அபிவிருத்தி வங்கி தவைவர் ஏ.பி.லசந்த பெர்ணன்டோ அவர்கள் நாடாவினை வெட்டி வங்கியினை திறந்துவைத்துள்ளதுடன் வாடிக்கையாளர்களிடம் இருந்து முதல் சேமிப்பு கணக்கினையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் வாகன மற்றும் தொழில் இயந்திர கொள்வனவாளர்களுக்கான கடன்முறையிலான இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசில்கள் என்பனவழங்கிவைக்கப்பட்டுள்ளன.

