முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு பகுதியில் உள்ள மக்களின் தோட்டக்காணி ஒன்றில் பாரிய வெண்கிணாந்தி பாப்பு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 22.10.2025 அன்று இடம்பெற்றுள்ளது குறித்த காணியின் உரிமையாளர் தனது தோட்டக்காணியில் பாரிய பாம்பினை கண்ட நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த வனஜீவராசி திணைக்களத்தினர் குறித்த வெண்கிணாந்தி பாம்பினை மீட்டுள்ளார்கள் இந்த பாம்பு இரை ஒன்று உட்கொண்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பாம்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் உள்ள வவுனிக்குளம் சரனாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விடப்பட்டுள்ளது.