Friday, October 24, 2025
HomeMULLAITIVUமுள்ளிவளையில் வாள்வெட்டும் அசிட் வீச்சும் இருவர் மருத்துவமனையில்!

முள்ளிவளையில் வாள்வெட்டும் அசிட் வீச்சும் இருவர் மருத்துவமனையில்!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை கிழக்க பகுதியில் இன்று(23) இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட இருவர் முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளியவளை கிழக்கு பகுதியினை சேர்ந்த 32 அகவையுடைய நபர் ஒருவரும் பொன்னகர் முள்ளியவளை பகுதியினை சேர்ந்;த 20 அகவையுடைய நபர் ஒருவருமே இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இளைஞர் குழு ஒன்று இருவர் மீது வாளால் வெட்டிவிட்டு அசிட் வீச்சு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் பாதிக்கப்படப்ட நபர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
இந்த சம்வவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
வாள்வெட்டிற்கு இலக்கான நபர்களின் சார்பில் இணக்கத்திற்கு செல்லுமாறு முள்ளியவளை பொலீசார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments