முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு கிராம சேவையாளர் பிரிவின் கீழ் உள்ள மூங்கிலாறு தெற்கு பகுதியில் ஐஸ் உடன் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை செய்த பணத்துடனும் இளம் குடும்பஸ்தர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
திலீபன் வீதி மூங்கிலாறு தெற்கு பகுதியினை சேர்ந்த 23 அகவையுடை குறித்த குடும்பஸ்தர் ஏற்கனவே ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்ற நிலையில் மீண்டு சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
12.10.2025 அன்று புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி குறித்த நபர் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை செய்துவருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபரை 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் போதைப்பொருள் விற்று பெற்ற ஒரு இலட்சத்தி முப்பதாயிரம் ரூபா பணமும் பொலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள் புதுக்குடியிருப்பு பொலீசார்.