முல்லைத்தீவு மாவட்டத்தில் புகையிரதத்தில் மோதிய காட்டுயானை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு பகுதியில் காட்டுயானை தாக்கி பொதுமகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவகாகியுள்ளது.
10.10.2025 அன்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் உள்ள பனிக்கன் குளம் பகுதியில் உள்ள புகையிரத பாதையில் புகையிரதம் பயணித்துக்கொண்டிருக்கும் போது புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட காட்டுயானை ஒன்று புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த யானை உயிரிழப்பு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலத்தினை பார்வையிட்டு யானையினை புதைக்குமாறு கிராமசேவையாளருக்கு பணித்துள்ளார்கள்
இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெலிஓயா பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் யானையினால் மனிஉயிர்கள் காவுகொள்ளப்படுவதுடன் யானைகளும் உயிரிழக்கின்றன குறிப்பாக மாங்குளம் பிரதேசத்தில் காணப்படும் புகையிரத கடவை பகுதிகளில் இவ்வாறன சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் யானையினால் விவசாயிகள் பாரியளவிலான விவசாய செய்கை அழிக்கப்பட்டு வருகின்றதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுகள் கடந்துவிட்ட விலையில் யானைகளின் அட்டகாசங்கள் அழிவுகளில்இருந்து விவசாயிகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுத்தாக இல்லை பல்வேறு இடங்களில் யானைவேலிகள் அமைத்துக்கொடுப்பதாக வாக்குறுதிகள் அளித்தும் முன்னேற்றமான எந்த நடவடிக்கையும் இதுவரை இடம்பெற்றதாக இல்லை..