புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள இளங்கோபுரம் பகுதியில் சட்டவிரோத கட்டுத்துவக்கு துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இளங்கோபுரம் தேராவில் விசுவமடு முகவரியைகொண்ட 25 அகவையடைய ஒருவர் அவரது வீட்டில் கட்டுக்குழல் துப்பாக்கிகள் 6 வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் இந்த சம்பவம் இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
