Monday, September 29, 2025
HomeMULLAITIVUஅனுராதபுரம் வாகன விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு!

அனுராதபுரம் வாகன விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு!

கடந்த 25.09.2025 அன்று புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் புதுக்குடியிருப்பு செம்மலை பகுதிகளை சேர்ந்த புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞனும் 29.09.2025 இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞனும் உயிரிழந்துள்ளார்கள்.
நடராசா விஸ்னுயன் 21 அகவையுடைய 9ம் வட்டாரம் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞன் அனுரபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்ப ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் 5பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments