கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தட்டுவன்கொட்டி பகுதியில் மக்கள் நடமாட்டமற்ற வீடு ஒன்றில் இருவர் சென்று எறிகணைகளை சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைக்கு பயன்படுத்துவதற்காக பிரித்து எடுத்துள்ளார்கள் இதன்போது எறிகணை ஒன்று வெடித்துள்ளது இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளார்கள்.
ஆனையிறவு பகுதியினை சேர்ந்த 25 அகவையுடைய சிங்கராசா அனுராஜா என்பவரும் அவருடைய மாமனான 50 அகவையுடைய கேதீஸ் என்பவரும் படுகாயமடைந்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்



