26.09.2025 இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேச மக்கள் வர்த்தக சங்கத்தினரின் ஒத்துளைப்புடன் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சமூக செயற்பாட்டாளர் தியாகு தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் பொதுச்சுடரினை யூதா கோவில் அருட்தந்தை ஏற்றிவைக்க தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்திற்கு மாவீரர்களின் பெற்றோர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்தை தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்திற்கான மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது








