முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றான பெரண்டீனா நிறுவத்தின் அனுசரணையுடன் கேப்பாபிலவு கிங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான விதைகள் கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கேப்பாபிலவு கிராமத்தில் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்கிவிக்கும் நோக்கில் பெரண்டீனா நிறுவனத்தின் அனுசரணையுடன் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளில் வீட்டுத்தோட்டத்தினை ஊக்கிவிக்கும் நோக்கில் இந்த கன்றுகள்,விதைகள்,உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கிராம சேவையாளர் மற்றும் பெரண்டீனா நிறுவனத்தின் இளைஞர் விவகார பொறுப்பதிகாரி,கரைதுறைப்பற்று இளைஞர் சம்மேளனத்தின் அதிகாரி,தேசிய இளைஞர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கிவைத்துள்ளார்கள்.




