பாதாள உலக குழுக்களுக்கு வெடிபொருட்களை வழங்கிய இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக கொமாண்டோ சலிந்தா’வுக்கு ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாண வடக்கு பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டு தற்போது
இவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
சந்தேகநபரான அதிகாரி முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய போது மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், இரண்டு தனித்தனி கொடுக்கல் வாங்கல்களில் 250ற்கும் அதிகமான ரி-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது இதற்காக அவர் 650,000 பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த அதிகாரி 2017 ஆம் ஆண்டு கொமாண்டோ படைப்பிரிவு மையத்தில் கடமையாற்றியிருந்ததாகவும், அந்த காலப்பகுதியில் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட கொமாண்டோ சலிந்தா’ அவரது கட்டளையின் கீழ் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
அன்றைய காலத்தில் பணியாற்றிய தொடர்பினை இராணுவத்தில் இருந்து விலகிய பின்னரும் குறித்த கட்டளை அதிகாரியுடன் தொடர்பினை பேணி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இன்றும் பல இடங்களில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் தேடி எடுக்கப்பட்டு வருகின்றன 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்ட இடமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தில் புதைந்த புதைத்து வைக்கப்பட்ட பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்ட தடையங்கள் கடந்த காலங்களில் கணப்பட்டுள்ளமை இதன் பின்னணி என்ன என்பதை சிந்தித்துபாருங்கள்..