முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது
பெரண்டீனா நிறுவனத்தினால் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெரண்டீனா லைப் லயின் வேலைத்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு பெரண்டீனா கிளையினரால் முதற்கட்டமாக 24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வானது கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பெரண்டீனா வடக்கு வலயத்தின் பிராந்திய முகாமையாளரான இராசையா-இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி-சதீசன் மஞ்சுளாதேவி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளார் சண்முகராசா கயூரதன் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சார்பாக குடும்பநல உத்தியோகத்தர் S.பாமினி மற்றும் பெரண்டீனா அபிவிருத்தி சேவைப்பிரிவின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் சோமசுந்தரம் ஜெயச்சந்திரன் மற்றும் பெரண்டீனா முல்லைத்தீவுக்கிளையின் முகாமையாளர் சபாபதி-கமலநாதன் பெரண்டீனா முல்லைத்தீவு கிளையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பொதிகளை வழங்கி வைத்தனர்
