Tuesday, September 9, 2025
HomeJaffnaஇலங்கையில் ஐஸ் போதை உற்பத்திநிலையமா? உண்மை என்ன?

இலங்கையில் ஐஸ் போதை உற்பத்திநிலையமா? உண்மை என்ன?

“முன்னோடி இரசாயனங்கள்” (precursors) , இவை பல்வேறு வகையான சட்டப்பூர்வ, நுகர்வு  தயாரிப்புகளை (அழகுசாதனப்பொருட்ட்கள், வாசனை பொருட்கள், மருந்து பொருட்கள் …) உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அதேசமயம் இவை போதை பொருட்களின் உற்பத்திக்கும்  அத்தியாவசியப் பொருட்களாக உள்ளன. ஆச்சரியமாக உள்ளதா, உதாரணமாக இருமல் பாணிகளில் காணப்படும்  எபெட்ரின் (ephedrine) மற்றும் சூடோஎபெட்ரின்(Pseudo ephedrine) ஆகியவை மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்திக்கான முக்கிய முன்னோடிகளாகும். இவ்வாறான முன்னோடி இரசாயன பொருட்கள் போதை மருந்து கடத்தல் செய்பவர்களுக்கு சென்றடைந்தால் அவர்கள் மிக இலகுவாக போதை மருந்தினை உற்பத்தி செய்து கொள்வார்கள். முன்னோடி இரசாயனங்களின் அடிப்படை இரசாயன கட்டமைப்பில் மாற்றங்களை செய்வதன் ஊடக போதைப்பொருளாக மாற்றலாம்

இலங்கையில் இவ்வாறான முன்னோடி இரசாயன பொருட்களின் இறக்குமதி, கண்காணிப்பு, பயன்பாடு என்பன இலங்கையில் தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் (National Dangerous Drugs Control Board (NDDCB). கட்டுப்படுத்தப்படுகின்றன. மேற்படி நிறுவனத்தில் முன்னோடி இரசாயனங்களினை இறக்குமதி செய்ய, உரிய நிறுவனங்களை பதிவுசெய்ய, முன்னோடி இரசாயனங்களினை பரிசோதிக்க, நிறுவனகளுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளவென தனியான பிரிவு ஒன்று இருக்கின்றது அதுதான் முன்னோடி இரசாயனங்களினை  கட்டுப்படுத்தும் பிரிவு Precursor Control Authority (PCA). இந்த முன்னோடி இரசாயனங்களின் இறக்குமதி, பயன்பாடு ….. போன்ற விடயங்கள் பின்வரும் சட்ட மூலம்  Conventions against Illicit traffic in Narcotic Drugs and Psychotropic Substances Act No. 01 of 2008  ஊடக கட்டுப்படுத்தப்படுகின்றது.

போதை மருந்து கடத்தல்காரர்கள் நேரடியாக போதை மருந்தினை கொண்டுவருவதிலும் பார்க்க முன்னோடி இரசாயன பொருட்களை நாட்டினுள் இலகுவாக கொண்டுவந்து போதை பொருளினை இலகுவாக உற்பத்தி செய்துவிடலாம். மேலும் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்பிக்கலாம் அல்லது குறைந்த தண்டனையினை பெற்றுக்கொள்ளலாம். இலங்கையில் பலவருடங்களுக்கு முன்னர் இவ்வாறான ஆய்வுகூடம்/ தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். தென்னமெரிக்க நாடுகளில் இவ்வாறான பல்லாயிரக்கணக்கான ஆய்வுக்கூடங்கள்/ தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையிலேயே அண்மையில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள்  உற்பத்தி செய்யும்  தொழில் சாலையினை இலங்கையில் நடத்தியதாக கூறப்படுகின்றது 

THANKS..

Dr. கனகசபாபதி வாசுதேவா  ஆகிய நான்  MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments