02.09.2025 அன்று இலங்கையின் ஐனாதிபதி அனுரகுமார திஸநாயக்க தலைமையிலான குழுவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,வட்டுவாகல்,சிலவாத்தை போன்ற இடங்களுக்க பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்புக்களை நடத்தி சில அரச திட்டங்களை தொடங்கிவைத்துள்ளார்.
காலை புதுக்குடியிருப்பில் உலக தெங்கு தினத்தில் தெங்கு முக்கோண வலயத்தினை தொடக்கிவைத்த அவர் அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திவிட்டு புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட அவர் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள கட்சி தொண்டனின் வீடு ஒன்றிற்கு சென்று அங்கு அவர்கள் குடும்பத்துடன் உறவாடி அவர்களின் குழந்தையினை தூக்கி மகிழ்ந்துள்ளார் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் ஒன்றினையும் அவர் எடுத்துள்ளார்.
தொடர்ந்து வட்டுவாகல் பாலத்திற்கான தொடக்க வேலையினை தொடக்கிவைத்த அவர் அங்கும் மக்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு சிலாவத்தையில் உள்ள விடுதி ஒன்றிற்கு சென்று உணவருந்தி விட்டு செல்லும் போது ஐனாதிபதியில் விருப்புக்கொண்ட மக்கள் பலர் அங்கு கூட்டமாக கூடி நின்றவேளை அந்த மக்களையும் சந்தித்து விட்டு அவர் தனது பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
ஐனாதிபதியின் இந்த செயற்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பளித்துள்ளது கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த ஐனாதிகளுக்க அருகில் கூட மக்கள் செல்லமுடியாத நிலை அவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியில் தான் அவர்கள் செல்வார்கள்.
ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியினை மக்கள் முதல் முதல் ஆதரித்து அவர்களுக்கான அங்கிகாரத்தினை கொடுத்துள்ளமை குறிப்பாக பிரதேச சபைகளில் மக்கள் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளமையானது மக்களின் மனங்களில் எவ்வாறான மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது என்பதை உணரமுடிகின்றது.