முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவில்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் கர்மேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினைமுன்னிட்டு சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று 01.09.2025 இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு,கருத்தரங்கு மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டிகள்,கண்காட்சி,மற்றம் வீதிநாடகம் என்பன நடைபெற்றுள்ளன.இந்த நிகழ்வில் முல்லைத்தீவு பொலீஸ் நிலைய சிறவர்பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட சிறுவர் தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதுன்
முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையிலும் சிறுவர் தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வீதி நாடகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் துண்டு பிரசுரங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.




