மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக வன்னி மண்ணின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு மண்ணில் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அமைந்துள்ள வளாகத்தில் காணப்படும் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டையினை வெற்றிகொண்டு தாக்கி அழித்து அதில் இருந்த பீரங்கிகளையும் கைப்பற்றினான் என்பது வரலாறு..
இவ்வாறு வுவனியா மாவட்டத்திலும் பட்டாரவன்னியனின் இந்த வெற்றி விழா நடைபெற்றுள்ளதுடன் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையிலும் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாக ஆங்கிலேயர்களால் அடையாளப்படுத்தப்பட்ட ஒட்டுசுட்டான் கற்சிலை மடு என்ற பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலை வளாகத்திலும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிகழ்வு நாளான 25.0.2025 இன்று பண்டாரவன்னியனின் வரலாற்றினை சொல்லும் அடங்காப்பற்றின் வன்னி என்ற நூலின் ஆசிரியரான வி.ப.லிங்கஜோதி எழுதிய நூலும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரிடத்திலும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலின் ஆசிரியர் யார் என பார்த்தால் அவர் தன்னை அறிமுகம் செய்துவைக்கின்றார் பிரித்தானியாவில் வசித்துவரும் வி.ப.லிங்கஜோதி அவர்கள் பண்டாரவன்னியனது சகோதரன் பரியாரிவேலன் குலசேகர வன்னியனது சேனாதிபதி தீரர் ஆகியோரது நேரடி வழித்தோன்றல் என்பதை குறிப்பிட்டுள்ளார்
பண்டாரவன்னியன் 31.0.1803 ஆம் ஆண்டு கற்சிலை மடு என்ற பகுதியில் தோற்கடிக்கப்பட்டான் என்பது ஜே.பி.லூயிஸ் எழுதிய நூலின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கடந்த காலத்தில் பண்டாரவன்னியன் வரலாற்றினை எழுதிய ஆசிரியர் முல்லை மணி அவர்கள் நடகத்திற்காக பல புனை பாத்திரங்களை எழுதியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டிய அவர் பண்டாரவன்னியனின் உண்மையான சம்பவங்களை ஆதாரங்களாக திரட்டி வெளியிட்டுள்ளார்.

பண்டாரவன்னியனை காட்டிக்கொடுத்த காக்கை வன்னியன் என்ற கதையினை முல்லை மணி அவர்கள் புனைத்துள்ளார் ஆனால் காக்கைவன்னியனுக்கம் பண்டாரவன்னியனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் காக்கை வன்னியன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவன் என்றும் ,ஆங்கிலேயர்களுக்க பண்டாரவன்னியன் தொடர்பான தகவல்களை வழங்கி காட்டிக்கொடுத்தவர் கதிர்காம நாயக முதலியார் என்பது தான் உண்மை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றும் மக்கள் மனங்களில் பண்டாரவன்னியனை காட்டிக்கொடுத்தது காக்கை வன்னியன் என்பதை அன்று புனைந்தவர் முல்லை மணி அவர்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறு பண்டாரவன்னியன் வரலாறு தொடர்பில்
பண்டாரவன்னியனுக்கும் பரியாரிவேலனுக்கும் இடையேயான தொடர்பு யார் இந்த பரியாரிவேலன் என்பது தொடர்பிலும் 24.07.1807 ஆம் ஆண்டு முல்லைத்தீவு சிறையில் வைக்கப்பட்டிருந்த பரியாரிவேலன் சிறையை உடைத்து அங்கிருந்து தப்பிய வரலாற்றினை சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னி போராட்டகாலத்தில் தீரர் பரம்பரையின் பங்களிப்பு, உள்ளிட்ட பல்வேறு புதிய தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார் இந்த நூல் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது பண்டாரவன்னியன் தொடர்பான தகவல்களை திரட்டு மாணவர்கள் உள்ளிட்ட நாடக கலைஞர்கள் இந்த நூலினையும் முழுமையாக படியுங்கள் இது தொடர்பிலான விமர்சனங்களையும் எதிர்பாக்கின்றோம்
நன்றி



