Tuesday, August 26, 2025
HomeMULLAITIVUநான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை!

நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை!

முத்தையன் கட்டில் இளைஞன் கொலை விவகாரத்தில் கைதான நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை!

முல்லைத்தீவு முத்தையன் கட்டுப்பகுதியில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 07.08.2025 அன்று முத்தையன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தினரால் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 19.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பாக ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்தரின் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகியுள்ள நிலையில் குறித்த வழக்கு 26.08.2025 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரண இன்று (26) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மூத்த சட்டத்தரணி கெங்காதரன் அவர்கள் உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக நியாயங்களை முன்வைத்துள்ளார்.

இந்த வழக்கின் இராணுவத்தினருக்கான பிணைகோரிக்கை இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் கடும் நிபந்தனைகளின் பின்னர் குறித்த நான்கு இராணுவத்தினரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு இராணவத்தினருக்கும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப்பிணையும் இவர்கள் சாட்சியங்களை அச்சறுத்தக்கூடாது என்றும் நீதிமன்ற அனுமதிஇன்றி வெளிநாட்டு பயணங்கள் செல்லமுடியாது என்று மன்று அறிவித்து பிணை வழங்கியுள்ளது.இது தொடர்பிலான வழக்கு விசாரணை 30.09.2025 அன்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments