மாவீரான் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடம் இருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றியதன் 222 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பண்டார வன்னியன் உருவச்சிலை அமைந்துள்ள கற்சிலை மடு பகுதியில் நடைபெற்றுள்ளது.
மாவீரன் பண்டார வன்னியன் உருவப்படாம் தாங்கி பவனியா எடுத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
அதிபர் சி.நாகேந்திரராச தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் ச.கிருசாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் கௌரவ விருந்தினரர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள்,பாடசாலை அதிபர்கள் அரச திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு விருந்தினர்கள் மாலை அணிவித்து மலர்தூவி வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன சிறப்புற நடைபெற்றுள்ளது.
குறிப்பாக பண்டாரவன்னியரின் வரலாற்றினை எடுத்துக்கூறும் பாடசாலை மாணவர்களின் ஆசிரியர் முல்லைத்தீபன் அவர்களின் நெறியாள்கையிலான பட்டிமன்றம் மற்றும் பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்வு என்பன சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
