முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700ற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணி அற்றவர்களாக காணப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளார்.
20.0.2025 இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் அவுஸ்ரேலிய தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கான வீடு அமைத்துக்கொடுக்கும் நிகழ்வின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியினை சேர்ந்த காணிஅற்ற வீடற்ற 50 குடும்பங்களை கிராம சேவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது தியோநகரில் 20 குடும்பங்களை தெரிவுசெய்துள்ளோம் இவ்வாறு சின்னச்சின்ன இடங்களில் காணிவீடுஇல்லாதவர்களை குடியிருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம் மேலும் காணி வீடு இல்லா மக்களை குடியிருத்துவதற்கான காணிகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.