Sunday, May 25, 2025
HomeKElinochchiகிளிநொச்சியில் புகையிரத விபத்து ஒருவர் தூக்கிவீசப்பட்டுள்ளார்!

கிளிநொச்சியில் புகையிரத விபத்து ஒருவர் தூக்கிவீசப்பட்டுள்ளார்!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை உந்துருளியில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை 12 மணியளவில் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த பொன்னளகு அனுசன்ராஜ் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த புகையிரத ம் சுமார் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதுடன், சடலம் உறவினர்களால் பொறுப்பேற்ற பின்னர் யாழ் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.புகையிரத ஊழியர்கள் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்ததுடன், கிளிநொச்சி பொலிசாரும் மக்களும் புகையிரத ஊழியர்களுடன் பேசி சடலத்தை உறவினர்களிடம் கையளித்தனர்.

தொடர்ந்து குறித்த சடலம் மலர்ச்சாலை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டது.விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை முறையாக இயங்குவது இல்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர் தானியங்கி சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்படும் கோளாறுகளால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments