Sunday, May 25, 2025
HomeMULLAITIVUஇலங்கையின் கராத்தே தோ சம்மேளத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு!

இலங்கையின் கராத்தே தோ சம்மேளத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு!

25.05.2025 இன்று இலங்கையின் கராத்தோ தோ தற்காப்பு கலை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்pல் ஆண்டு நிறைவு விழா சிறப்புற நடைபெற்றுள்ளது.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட இலங்கை கராத்தே தோ கூட்டமைப்பின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட கராத்தே தோ சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தற்காப்பு கலையினை இளைஞர்கள் மத்தியில் ஊக்கிவிக்கவேண்டும் என்ற நோக்கில் முல்லைத்தீவ மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 09 தற்காப்பு கலை பயிற்சி நிலையங்களை சேர்ந்த 400 வரையான மாணவர்கள் தங்கள் தற்காப்பு கலையின் செயல்விளக்கத்தினை செய்து காண்பித்துள்ளார்கள்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி ப.பரணிதரன்.சிறப்பு விருந்தினராக புதுக்குடியிரப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சத்தியறூபன்,கௌரவ விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.கேரத்,புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அதிபர் ஐ.நெவில்ஜீவராசா,புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயவலாளர் எஸ்.கிருசாந்தன்,ஆர்.சகிதரசீலன் மாவட்ட விளையாட்டு பயிற்றுனர்,எஸ்.வரதன் விளையாட்டு உத்தியோகத்தர்,கி.கஜகோகுலன் கிராம உத்தியோகத்தர் நவநீதன் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கதலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன மாணவிகளின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து தற்காப்பு கலையின் செயல் விளக்கம் 400 மாணவர்களால் காண்பிக்கப்பட்டுள்ளது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கறுப்புப்பட்டி நிலையினை உடைய சிறந்த பயிற்சி ஆசான்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களின் செயல் விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.இந்த நிகழ்வில் பங்கெடுத்து பயிற்சிகளை மேற்கொண்ட 400 வரையான மாணவர்களுக்கும் விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments