22.05.2025 அன்று மாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர் பகுதியில் நண்பர்கள் மூவர் போதைக்கு அடிமையான நிலையில் அவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட வேளை ஒருவர் மயங்கிய நிலையில் மற்றையவர்கள் சம்பவ இடத்தினை விட்டு தலைமறைவாகியுள்ளார்கள் மயங்கியவர் 23 அகவையுடைய வவுனியாமாவட்டத்தினை சேர்ந்த புதுக்குடியிருப்பில் திருமணம் செய்து வாழ்ந்துவரும் நபர்.
இவரது உயிரிழப்பு தொடர்பில் பிரோத பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.அதிகளவான போதைப்பொருள் பாவித்தே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருடன் சேர்ந்த போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட புதுக்குடியிருப்பினை சேர்ந்த நபர் ஒருவரை 23.05.2025 அன்று புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள் குறித்த சந்தேக நபரையும் சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை அவர் போதைபொருள் பாவனைக்கு அடிமையாகியவர் என தெரிவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது உயிரிழந்தவரின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கசொல்லியும் போதைக்கு அடிமையான நபரை 6 மாதலாம் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்விற்கு உட்படுத்துமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டு வருகுகின்றார்கள்