Friday, June 20, 2025
HomeMULLAITIVUவைரவிழா காணும் மல்லாவி மத்திய கல்லூரி!

வைரவிழா காணும் மல்லாவி மத்திய கல்லூரி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகிய மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் நாளைய தினம் (23) பாடசாலை வளாகத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெறவுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியிலே இருக்கின்ற இந்த பாடசாலை பல மாணவர்களை பல்கலைக்கழகங்கள் அனுப்பியதோடு மட்டுமல்லாது விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு இணைபாடவிதான செயல்பாடுகளிலும் சாதனை மிக்க மாணவர்களை உருவாக்கிய ஒரு பாடசாலையாக காணப்படுகிறது

குறிப்பாக பல்வேறு இடங்களிலும் உள்ள மாணவர்கள் குறிப்பாக யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த போது இந்த மல்லாவி பாடசாலையில் கல்வி கற்று தற்போது புலம்பெயர் நாடுகளிலும் நாட்டினுடைய பல்வேறு பகுதிகளிலும் இந்த பாடசாலையினுடைய மாணவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்

இவ்வாறாக இந்த கல்லூரி தாயின் பரந்து விரிந்து இருக்கின்ற மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்தினரின் அயராத முயற்சியின் பயனாக வைர விழா நிகழ்வுகள் நாளைய தினம் (23) பாடசாலை வளாகத்தில் மிகக் கோலாகலமாக இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி (தேசியப் பாடசாலை) பாடசாலையினுடைய முதல்வர் து.யேசுதானந்தர் தலைமையில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையினுடைய ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்து கொள்கின்றார்

குறித்த நிகழ்வில் அனைவரையும் அனைத்து அனைத்து பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலம்பிருமிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments