புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் 20 லீற்றர் கசிப்புடன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
24.05.25 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணிக்கபுரம் பகுதியில் மூன்று குடும்பங்கள் கசிப்பினை விற்பனை செய்து இளைஞர்,குடும்பதலைவர்களை சீரழித்து வருவதாக மக்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த நிலையில் கட்டம் கட்டமாக அங்கு கசிப்பு விற்பனைசெய்துவரும் குடும்பத்தினர் பிரதேச இளைஞர்களின்ஒத்துளைப்புடன் பொலீசார் கைதுசெய்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தி வந்துள்ளார்கள்.
இவ்வாறு அன்று மக்களால் இனம்காணப்பட்ட மூன்று குடும்பத்தில் ஒரு குடும்பத்தினை சேர்ந்த நபர் வீட்டில் வைத்து கசிப்பினை விற்பனை செய்வதற்காக 20 லீற்றர் கசிப்பினை கொண்டுசென்றவெளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இவர் தொடர்பிலான வழங்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது 03.06.2025 ஆம் திகதிவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
ReplyForwardAdd reaction |