முல்லைதீவில் பச்சை புல்மோட்டை அண்டிய ஏரி பகுதியில் ஆணின் உடலம் மீட்பு!
முல்லைத்தீவு போலீஸ் பிரிவுக்குட்பட்ட பச்சைப்புல் மோட்டை ஏரி பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண்ஒருவரின் உடலம் இன்று(5) இனங்காணப்பட்டுள்ளது
அம்பலவன் பொக்கனை புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த 27 அகவை உடைய றாய சீலன் ராஜ்குமார் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
கிராமவாசிகள் கொடுத்த தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு உடலத்தை மீட்டுள்ளார்கள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்
