முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உட்சவம் வருகின்ற 09.06.2025 அன்று நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் (30.04.25) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 4.00 மணிக்கு நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பொங்கல் உட்சவ தினத்தில் ஆலய சூழலில் மருத்துவசேவை, சுகாதார சேவை, முதலுதவி சேவை, நீர் சுகாதார சேவை, வர்த்தக நிலையங்களுக்கான உரிமம், பாதுகாப்பு, அனர்த்த முன்னாயத்த ஏற்பாடு, போக்குவரத்து சேவை, மின்சார சேவை முதலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், உதவி மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, அரச மற்றும் தனியார் போக்குவரத்துக் கழகத்தினர், மின்சார சபையினர், மாவட்ட ம


