திசைகாட்டி சின்னத்திற்குதான் அதிகமான மக்கள் வாக்களிக்க இருக்கின்றார்கள் -அமைச்சர் லால்காந்த!
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் புரப்புரைக்கூட்டம் 16.04.2025 இன்று ஒட்டுசுட்டான் முத்தையன் கட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளது.
விவசாயம் மற்றும் கால்நடை காணி அமைச்சர் லால் காந்த மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செ.திலகநாதன்,ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
முத்தையன் கட்டு,இடது கரை பாரதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அமைச்சரிடம் மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் லால்காந்த..
சாதரணமாக அரசாங்கம் ஆட்சி அமைத்ததன் பிற்பாடு உடனடியாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் போது அரசாங்கத்திற்கு சார்பாகத்தான் தேர்தல் முடிவுகள் அமைகின்றன வழமையாக.
ஆனால் தேசிய மட்டத்pல் ஒரு செயற்திட்டத்தனை நாங்கள் நடைமுறைப்படுத்திக்கொண்டு செல்லும் வகையில் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எல்லா இடங்களிலும்நாங்கள் செல்கின்றோம் நாங்கள் பாக்கின்ற போது தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி சின்னத்திற்குதான் அதிகமான மக்கள் வாக்களிக்க இருக்கின்றார்கள் என்பது தெரியக்கூடியதாக இருகின்றது.
விவசாய நிலங்களுக்கு வீசப்படும் கிருமி நாசினிகள் வேலைசெய்வதில்லை இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றார்கள் என ஊடகவியலாளரின் கேள்விக்கு?
கடந்த காலங்களில் கடந்தகால அரசாங்கத்pனால் இறக்குமதிசெய்யப்பட்ட தயாரிக்கப்பட்ட இவ்வாறான பயனற்ற மருந்துவகைகள் இருக்கின்றமை எங்களுக்கு தெரியும் அதற்காக நாங்கள் இரசாயன கூட்டுத்தாபனம்,விவசாயதிணைக்களம் உள்ளிட்ட திணைக்களத்துடன் கலந்தாலோசித்துள்ளோம் எதிர்காலத்pல் பொருத்தமான கிருமிநாசினிகளை வழங்கக்கூடியதாக இருக்கும் அந்தவகையில் மக்களின் பாவனைக்கு உதவக்கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க தீர்மானித்துள்ளோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் காணிகள் இராணுவத்தினர் வனவளத்திணைக்களம்,வனஜீவராசிகள் தணைக்களத்திடம் உள்ளது இதுதொடர்பில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
மக்களின் இடத்தினை மக்களுக்கு கொடுக்கவேண்டும் அதனை கட்டாயம் செய்வோம் அது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம் எதிர்காலத்தில் அதனை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலப்பகுதியில் மக்களிடம் இருந்த பொமிட் காணி பத்திரங்கள் உறுமய என்ற செயற்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு அவர்களுக்கு உறுதி வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது அனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் திணைக்களங்கள் ரீதியாக காணப்படுகின்றன அந்தந்த திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கு இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம் விரைவில் மக்களுக்கு பொருத்தமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்