கேப்பாப்புலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை!
கேப்பாபிலவு மக்கள் தங்கள் காணிகளை உடன் விடுவிக்க கோரி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.
11.04.2025 இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மேதகு ஐனாதிபதி கேப்பாபுலவு மக்களின் காணிகளை உடன் விடுவியுங்கள் என்ற பதாகையினை தாங்கியவாறு கவனயீர்ப்பினை மேற்கொண்டனர்.
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செலயத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களை சந்தித்து மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
10.04.2025 அன்று கேப்பாபிலவு மக்கள் ஐனாதிபதி செயலகம் சென்று அங்கு கலந்துரையாடிய போது அவர்களின் காணிவிடயம் தொடர்பாக கேட்டபோது அது தொடர்பில் அங்கு எந்த தகவலும் இல்லை என ஐனாதிபதி செயக அதிகாரிகள் தெரிவித்துள்ளமையினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
ஐனாதிபதி செயலகத்திடம் இருந்து கேப்பாபிலவு காணிகள் தொடர்பிலான விபரங்களை திரட்ட சொல்லி மாவட்ட செயலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள் அதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் என கேப்பாபிலவு மக்களிடம் அரச அதிபர் தெரிவித்துள்ளார். அத்தோடு தம்மால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் மக்களுக்கு காண்பித்தார்
கேப்பாபிலவு மக்களின் 55 குடும்பங்களின் 59.5 ஏக்கார் காணி இன்னும் படையினரின் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது