உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வட மாகாண சுற்றுலா பணியகத்தால் சனசமூக நிலையங்களிற்கிடையில் நடாத்தப்பட்ட புகைப்படப்போட்டியில் கரைதுறைப்பற்று பிரதேச சபை வடமாகாணத்தில் முதலாம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று நிலைகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
திரு. செல்வராசா கீதாஞ்சன், 3ம் வட்டாரம் முள்ளியவளை (முள்ளியவளை மத்தி சனசமூக நிலையம்) அவர்கள் மாகாணம், மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
அத்துடன் மாவட்டத்தில் அடுத்துள்ள இரு நிலைகளையும் செல்வி. யு.டதுசனா அளம்பில் முல்லைத்தீவு (சென் அன்ரனீஸ் சனசமூக நிலையம் அளம்பில்,
திரு. அ.அபிசாங்கன் அளம்பில் முல்லைத்தீவு (சென் அன்ரனீஸ் சனசமூக நிலையம் அளம்பில்)
ஆகியோரும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை கரைதுறைப்பற்று பிரதேசசபை பாராட்டி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றது