Thursday, December 26, 2024
HomeMULLAITIVUமாடு மேய்க்க சென்ற வயோதிபர் மீது காசிப்பு காச்சும் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்குதல்!

மாடு மேய்க்க சென்ற வயோதிபர் மீது காசிப்பு காச்சும் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்குதல்!

மாடு மேய்க்க சென்ற வயோதிபர் மீது காசிப்பு காச்சும் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்!
முள்ளியவளை புதறிகுடா பகுதியில் தனது கால்நடைகளை மேச்சலுக்காக விட்டுவிட்டு அவற்றை பட்டிக்கு கொண்டுவருவதற்காக மாடுகளை பார்க்க சென்ற வயோதிபர் மீது கசிப்பு காச்சும் கும்பலை சேர்ந்த ஒருவர் குறித்த பகுதியில் நிக்கவேண்டாம் என தெரிவித்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று 26.12.2024 இன்று மாலை புதறிகுடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

73 அகவையுடை வற்றாப்பளையினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ..

முள்ளியவளை வற்றாப்பளை பகுதிகளில் கால்நடைகளை மேற்பதற்கான சரியான மேச்சல்தரவை இல்லாத நிலையில் குறித்த வயோதிபர் தனது கால்நடைகளை வற்றாப்பளை வயல்வெளி மற்றும் புதறிகுடா பற்றைக்காடுகள் பகுதிகளில் மேச்சலுக்காக விடுவது வழமை அந்தவகையில் இன்று மேச்சலுக்காக கால்நடைகளை விட்டுவிட்டு அவற்றை பட்டிக்கு அழைத்துக்கொண்டுவருவதற்காக புதறிகுடா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வீதியால் உந்துருளியில் சத்தி திரிந்த ஒருவர் இவரினை அவதானித்துவிட்டு அவரை குறித்த பகுதியில் நிக்கவேண்டம் என மிரட்டல் விடுத்துவிட்டு பின்னர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட வயோதிபர் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவமனை பொலீசார் அவரிடம் வாய்முறைப்பாட்டினை எடுத்துள்ளார்கள்.
முள்ளியவளை புதறிகுடா பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திசெய்யப்பட்டுவரும் சம்பவம் அதிகரித்து காணப்படுவதுடன் முள்ளியவளை பொலீசார் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments