முள்ளியவளை பகுதியில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 8 குடும்பங்களுக்கு ஈழம் நிசான் அறகட்டளை ஊடாக உலர் உணவு பொதிகளும் பணமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பபட்ட இனம்காணப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு 27.12.2024 அன்று முள்ளியவளை அன்னை திரோசாம்பாள் ஆலயத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
8 குடும்பங்களுக்கு 5ஆயிரம் ரூபாபெறுமதியான உலர் உணவு பொதிகளும் தலா 10ஆயிரம் ரூபா பணமும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நிதி உதவியினை நெதர்லாந்தில் இருந்து கிளைமேன்ட் அவர்களின் நிதி உதவி யூடாக ஈழம்நிசான் அறக்கட்டளையினரால் இந்த உலர் உணவு பொதிகள் மற்றும் பணம் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளன.