05.12.2024 அன்று வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹடுகஸ்வௌ பிரதேசத்தில்கெப்பற்றிகொல்லாவ எல்லைக்குட்பட்ட பதவியாபொலிஸ் பிரிவுக்குட்பட்டபாலயவௌ பகுதியில் பெண்ணொருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை 06-12-24 அன்று வெலிஓயா பொலீசார் கைது செய்துள்ளார்கள்.
ரி 56 துப்பாக்கி அதன் 08 தோட்டாக்கள் மற்றும் ஒரு ரிவால்வர் துப்பாக்கி அதன் 05 தோட்டாக்கள் மேலும் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 41 அகவையுடைய இல. 39 கிரிப்பன்வௌ, வெலிஓயா, மற்றும் 33அகவையுடைய இலக்கம் 158 ஹெதுகஸ்வௌ, வெலிஓயா,மற்றும் 39 அகவையுடைய இல. 186, ஹெதுகஸ்வௌ, வெலிஓயா, பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விசாரணைகளை முன்னெடுத்துவரும் வெலிஓயா பொலீசார் சந்தேக நபர்களையம் சான்று பொருட்களையும் கெபற்றிகொலாவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.