இந்திய யாழ் துணைத்தூதர் ஸ்ரீ சாய் முரளி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிகாரிகள் இன்றைய தினம் 07.12.24 துணுக்காய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் நோக்கிலும், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும் முகமாகவும் அவர்களின் பயணம் அமைந்துள்ளது.
இதன் போது துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு இந்திய-இலங்கை நட்புறவு என்றும் இந்தியாவில் இருந்து அன்புடனும் அக்கறையுடனும் பொறிக்கப்பட்ட பொதிகளில் ஒருபாயும் இரண்டு பெட்சீட்களும் பிரதேச செயலகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவி வழங்கும் இந்த நிழக்வில் கருத்துரைத்த இந்திய யாழ் துணைத்தூதர் ஸ்ரீ சாய் முரளி இந்தியாவும் இந்திய மக்களும் வழங்கும் இந்த உதவி இலங்கையில் குறிப்பாக வடக்கு,கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு மக்களோடு இன்றும் என்றும் ஆதரவாக நின்றது நிற்பது நிற்கப்போவது என்ற நம்பிக்கையினை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.