முள்ளியவளையில் கிணற்றிற்குள் வீழ்ந்த யானை மற்றும் யானை குட்டிகள்!


முல்லைத்தீவில் விவசாய கிணற்றிற்குள் வீழ்ந்த யானைகளை பாதுகாப்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மீட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு முள்ளியவளை தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள களிக்காடு விவசாய கிராமத்தில் உள்ள விவசயா கிணற்றில் தாய்யானை ஒன்றும் இரண்டு குட்டிகளும் வீழ்ந்துள்ளன.

இந்த யானைகள் 24.04.23 அன்று இரவு வீழ்ந்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள். அன்று அருகில்உள்ள வயல் நிலங்களை யானைக்கூட்டம் ஒன்று நாசம் செய்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

கூட்டமாக வந்த காட்டு யானைகள் விவசாய கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என்றும் யானையினால் நாள்தோறும் அழிவினை சந்தித்துவருவதாகவும் களிக்காட்டு விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

யானைகள் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் விவசாயிகள் கிராம அலுவலகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வளங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை மீட்டு காட்டில் விட்டுள்ளார்கள்.

குறித்த யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதை தொடர்ந்து அருகில் உள்ள பற்றைக்காட்டில் யானைக்கூட்டம் ஒன்று நின்றுள்ளதுடன் யானையினை மீட்கும் நடவடிக்கையின் போது குறித்த யானைக்கூட்டம் கிணற்றினை நோக்கி வந்தவேளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வெடிகொழுத்தி யானைகளை கலைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *