Wednesday, December 4, 2024
HomeMULLAITIVUஈழத்து கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமே கலைஞர்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்!

ஈழத்து கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமே கலைஞர்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்!

ஈழத்து கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமே கலைஞர்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என ஈழத்து குறுந்திரைப்பட இயக்குனர் செல்வராசா தனுசன் தெரிவித்தார்.

இன்றையதினம் (02.12.2024) காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தோல்வி நிலையென நினைத்தால் எனும் குறும்திரைப்படம் ஒன்றினை தயாரித்து 

ஈகிள் ஸ்ரூடியோ (Eagle studio) எனும் யூரியூப் தளத்தில் நேற்றையதினம் மாலை வெளியிட்டிருக்கின்றோம். அதனை நீங்கள் பார்க்க முடியும். 

இக் குறும் திரைப்படத்தில் அதிக ஈழத்து கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அதிலும் ஈழத்தில் பிரசித்திபெற்ற நடிகர்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள் 

ஈழத்தில் வெளியிடும் திரைப்படம் ஆகையால் எமது ஈழத்து கலைஞர்களை அனைவரும் பார்த்து ஊக்கிவிக்க வேண்டும். ஊக்குவிப்பதன் மூலமே கலைஞர்கள் அடுத்த கட்ட முழுநீள திரைப்படம் நோக்கி நகர முடியும்.

இந்த படத்தினை அனைவரும் பாருங்கள் உங்களுக்கு  பிடித்திருந்தால் எமக்கு முழு ஆதரவை தாருங்கள். தொடர்ந்து நாம் ஈழத்து சினிமாவை வளர்ப்பதற்கு தயாராக இருக்கின்றோம் .

மக்கள் அனைவரும் எம் குறும்படத்தினை பார்த்து உங்கள் விமர்சனங்களை கூறவேண்டும் . அது தான் எம் அடுத்த கட்ட நகர்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

சதீஸ்கரனின் தயாரிப்பிலும் செல்வராசா தனுசனின் இயக்கத்திலும், விக்னேஸ்வரன் மற்றும் எஸ்.ஜே.லைபனின் துணை இயக்கத்திலும் குறித்த குறுந்திரைப்படமானது வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments