Saturday, April 26, 2025
HomeMULLAITIVUவவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்!

வவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்!

வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்தனர்.

பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பேருந்தில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி முகாமிற்கு சென்று கொண்டிருந்த போது நேற்று இரவு (29.11) யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவரை, கடற்படையினர் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது. பூனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments