Sunday, April 27, 2025
HomeUncategorizedவவுனியா போக்குவரத்து சாலையில் களவு போன 18 கிலோ கிறீஸ்!

வவுனியா போக்குவரத்து சாலையில் களவு போன 18 கிலோ கிறீஸ்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வவுனியா சாலையில் கடந்த 17.11.2024 ஆம் திகதி இரவு 18 கிலோ கிறீஸ் களவு போயுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 6.00 மணிதொடக்கம் 11.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் புதியவாளியுடன் வைக்கப்பட்ட 18 கிலோ கிறீஸ் களவாடப்பட்டுள்ளது.

சாலையின் அரச போக்குவரத்து பேருந்துகளின் தேவைக்காக கொண்டுவரப்பட்ட இந்த கிறீஸ் களவாடப்பட்டுள்ளமை அரச சொத்தினை களவாடும் சம்பவமாக பார்க்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சாலை முகாமையாளரால் வடபிராந்திய பாதுகாப்பு முகாமையாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வவுனியா பொலீஸ் நிலையத்தில் 18.11.2024 அன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடந்த கொரோனா காலத்தில் 400 லீற்றர் டீசல் களவாடப்பட்டுள்ளது அது தொடர்பில்இலங்கை போக்குவரத்து சபை விசாரணைகளை மேற்கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் வவுனியா சாலையில் இருந்து அப்பப்ப பெறுமதியானபொருட்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மக்கள் வரிப்பணங்களில் காணப்படும் அரச சொத்துக்களை சூறையாடுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments