பரந்தன் வீதியில் போடப்பட்ட ராணுவ வீதி தடை!
முல்லை தீவு மாவட்டத்தில் திடீரென ராணுவத்தினர் வீதிகளில் வீதி தடை போட்டு காவல் கடமைகளில் ஈடுபட்டு வருவதை இன்று 21-09-24 அவதானிக்க முடிந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த பின்னர் யார் ஜனாதிபதியாக வந்தாலும் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையிலும் மக்கள் மத்தியில் நாளை அல்லது நாளை மறுதினம் ஊரடங்கு சட்டம் அமுல் வரும் என்ற மனநிலை காணப்பட்டு வருகின்றது
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ராணுவத்தினர் வீதி தடைகளை விதித்து காவல் கடமையில் ஈடுபட்டு இருப்பதை அவதானிக்க முடிகின்றது
புதுக்குடியிருப்பு பகுதியில் புதுக் குடியிருப்பு முல்லைதீவு வீதியில் நகர் பகுதியில் ராணுவத்தினர் வீதி தடை அமைத்துள்ளதை காண முடிகின்றது
அதேவேளை புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் செல்லும் வீதியில் 10 கிலோமீட்டருக்கு தொலைவில் உடையார் கட்டு என்ற பகுதியில் ராணுவத்தினர் வீதி தடையினை விதித்துள்ளார்கள் ராணுவத்தினரின் இந்த திடீர் வீதி தடையானது மக்கள் மத்தியில் நாளை ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் அச்ச நிலையும் உலாவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்