Tuesday, December 3, 2024
HomeUncategorizedஜே.வி.பி யினர் மீண்டும் 88-89 போன்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்!

ஜே.வி.பி யினர் மீண்டும் 88-89 போன்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்!

ஜே.வி.பியினர் காலியில் வீடு வீடாக பிரசாரம் செய்வதற்கு கெஸ்பேவயிலிருந்து இருபத்தைந்து பேரூந்துகளை கொண்டு வந்துள்ளனர்

பேருந்து கட்டணம் அறுபதாயிரம், அமைப்பாளருக்கு இருபதாயிரம்.

பத்திரிக்கையாளர்களை கொன்றவர்கள் மரியன்ஸ் இசைக்குழுவிற்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

ஜே.வி.பி பற்றி புத்தகம் எழுதிய ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்

மீண்டும் அச்சுறுத்தல் செய்து 1988-1989 போன்ற நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

பொதுக்கூட்டம் எனக்கூறி மக்களை அழைத்து ஜே.வி.பியினர், காலியில் வீடு வீடாக தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர்

ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பிலான ஆலோசகர் மனுஷ நாணயக்கார இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறினார்.

இசைக்குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் 1988-1989 போன்றதொரு சூழலை மீண்டும் உருவாக்க ஜே.வி.பி முயற்சிப்பதாக அவர் கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் நேற்று காலியில் பிரசாரம் செய்தோம். பதினான்காயிரம் இடங்களில் ஜனாதிபதிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது. இன்று காலை எனக்கு சில செய்திகள் கிடைத்தன. அது உண்மையா பொய்யா என்பதை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். காலியில் வீடு வீடாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் செய்ய கெஸ்பேவ டிப்போவில் இருபத்தைந்து பஸ்கள் முன்பதிவு செய்து அதில் பொது மக்களை ஜே.வி.பினர் அழைத்துவந்துளளனர்.

ஜே.வி.பின் தேர்தல் பிரசார கூட்டங்கள் என்று கூறிக்கொண்டு நாடு முழுவதிலும் உள்ள மக்களை அழைத்துவந்து காலியில் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறுதான் அவர்களால் போலி மக்கள் அலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே காலியில் இருப்பவர்கள் யாரும் முட்டாள்கள் இல்லை நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதனை ஊடகங்கள் ஆராய்ந்து பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டும்.

ஜே.வி.பினரால் இந்த நாட்டில் திறமையாக செய்திகளை வழங்கியதற்காக ஊடகவியலாளர் சாகரிகா கோமஸ் மற்றும் பிரேமகீர்த்தி டி அல்விஸ், ரிச்சர்ட் டி சொய்சா போன்றோர்கள் கொல்லப்பட்டார்கள். பிரபல இசைக்குழுவான மரியன்ஸ் இசைக்குழுவின் ரோசாலா ஒரு பாடலை மாற்றி பாடியுள்ளார். இதனால் அந்த இசைக்குழுவுக்கு மன்னிப்பு கேட்கும்படி அசச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திவயின பத்திரிகையின் எரிக் காமினி தேசிய மக்கள் சக்தியின் பேச்சுக்கள் மற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடுகள் என்ற புத்தகத்தை எழுதியமையால் இன்று திவயின பத்திரிகை அவரை வீட்டுக்கு அனுப்பும் வேலையை ஆரம்பித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு உண்மையைக் கூற வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

வடக்கிற்குச் சென்று தென்னிலங்கை மக்கள் தேர்தலில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதாகவும் அதனை வடக்கில் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார். வடக்கு மக்கள் மாத்திரம் அந்த தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் போது தென்பகுதி மக்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது தமக்கு தெரியாது எனவும் அச்சுறுத்துகின்றார்.

ஜே.வி.பி. பேரணிக்கு சென்ற ராணுவ அதிகாரியை அச்சுறுத்தும் வீடியோக்களை பார்த்திருக்கிறோம். இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்து மீண்டும் 88-89 போன்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதன் மூலம் ஒரு பேரழிவை உருவாக்க பார்க்கின்றார்கள் . இதை நாட்டு மக்கள் சிந்தனை செய்ய வேண்டும். இதுபோன்ற விடயங்களில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments