Tuesday, April 29, 2025
HomeUncategorizedதோட்டத்தொழிலார்களின் சம்பள அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டது!

தோட்டத்தொழிலார்களின் சம்பள அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டது!

தேயிலை உற்பத்தி மற்றும் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரித்தல் .

  1. தேயிலை உற்பத்தி மற்றும் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக சம்பள நிர்ணயச் சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, தேயிலை உற்பத்தி மற்றும் இறப்பர் உற்பத்தி நிர்வாகச் சபை கூட்டம் 12.08.2024ம் திகதி நடைபெற்றது.
  2. தன்னார்வ மற்றும் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் சம்பள நிர்ணயச் சபை கூட்டத்தில் பங்கேற்றனர். இங்கு, தொழிற்சங்க தரப்பு உறுப்பினர்கள் முன்வைத்த சம்பள உயர்வு முன்மொழிவுகள் இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
  3. ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் தரப்பினர்களின் உறுப்பினர்கள் சம்பள நிர்ணயச் சபை கூட்டங்களில் பல முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
  4. தேயிலை உற்பத்தி கைத்தொழில் தொடர்பான சம்பள நிர்ணயச் சபை கூட்டத்தில் முதலாளிமார்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இரண்டினதும் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பின்வரும் பிரேரணை தொடர்பில் நிர்வாக சபை உறுப்பினர்களின் இணக்கத்தைப் பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
    குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,350.00 (இந்த 1,350.00 ரூபாய் .EPF ,EDF உள்ளடக்கிவுள்ளது எனவே இந்தத் தொகையானது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளை நிதிக்கு செலுத்தப்பட வேண்டும்.)
    உற்பத்தித்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை – ரூ.350.00 அடங்கலாக மொத்த நாளாந்த சம்பளம் – ரூ.1,700.00 என உறுதி செய்யப்பட்டது.
    மேற்படி முன்மொழிவுக்கு, தேயிலைத் தோட்டக் கைத்தொழில் நிர்வாக சபையின் மூன்று தொழிற்சங்க உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய தொழிற்சங்க உறுப்பினர்கள், முதலாளிமார்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் அங்கீகரித்துள்ளனர்.
  5. மேற்படி பிரேரணை இறப்பர் தோட்டத் தொழிற்துறை முகாமைத்துவ சபைக் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டதுடன், அக்கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள், முதலாளிமார்கள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகளின் ஏகமனதான ஒப்புதலுடன் இப்பிரேரணை அங்கீகரிக்கப்பட்டது.
  6. சம்பள நிர்ணயச் சபை கூட்டங்களில், முதலாளிமார்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இரு தரப்பினதும் உடன்பாட்டின் மூலம் தொடர்புடைய சம்பள உயர்வு முன்மொழிவுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இதனால் தொழிலாளர்கள் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை சட்டத் தடையின்றி பெற முடியும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments