வடக்கின் எல்லையில் நின்று கிழக்கினை கண்காணிகத்த சஜித்பிரேமதாசா!

வடக்கின் எல்லையில் நின்று கிழக்கினை கண்காணிகத்த சஜித்பிரேமதாசா!

16.07.2024 அன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசா அவர்கள் கொக்குளாய் பகுதியில் வசித்துவரும் மக்களின் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு கொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலைக்கு மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறையினை திறந்துவைத்த அவரிடம் கொக்கிளாய் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொக்கிளாய் முகத்துவாரம் பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் வடக்கு கிழக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதியாக காணப்படும் கொக்குளாய் -புல்மோட்டை கடல் இணைப்பினையும் பார்வையிட்டுள்ளார்.

கொக்கிளாய் பகுதியில் வசித்துவரும் பெரும்பான்மை மக்கள் தங்களின் காணிப்பிரச்சினை,வீட்டுப்பிரச்சினையினை சஜித்பிரேமதசா அவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்கள்

வடக்கினையும் கிழக்கினையும் இணைக்கும் கொக்கிளாய் பாலம் இல்லாத நிலையில் மக்களின் கடல் போக்குவரத்தின் சிரமத்தினையும் எதிர்க்கட்சி தலைவர் பார்வையிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

Admin Avatar