Monday, April 28, 2025
HomeUncategorizedவிசுவமடுவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!

விசுவமடுவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!

விசுவமடு வள்ளுவர் புரம் பகுதியில் தும்பு உற்பத்தி தொழிற்சாலை இன்று தீ விபத்திற்கு இலக்காக உள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட விசுவமடு வள்ளுவர் புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது தொடர்ந்து குறித்த பகுதிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வள்ளுவர்புரம் பகுதியில் பெண்களை கொண்ட சிறு கைத்தொழில் நிறுவனமாக இந்த கைத்தொழில் தும்புத் தொழிற்சாலை நிறுவனம் கடந்து 8 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது 12 பெண் தொழிலாளர்கள் இந்த தும்புத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார்கள்

இந்த நிலையில் தும்புகளை பிரித்து காயம் விடப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதேச செயலகம் ஊடாக கிளிநொச்சியிலிருந்து தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு முற்று முழுதாக நீர் பாய்ச்சப்பட்டு தும்புளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இதனால் 12 லட்சம் பெறுமதியான  தும்புகளுக்குள் தீவிரவல் ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த துண்டு தொழிற்சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments