ஆலயங்களில் நடைபெறும் மேசடிகளை கண்டுகொள்ளாத திணைக்களங்கள்
வடமாகாணத்தில் உள்ள ஆலயங்களில் இடம்பெறும் நிதி மோசடிகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின் உள்ள திணைக்களங்கள் சரியான நடவடிக்கை எடுக்கத்தவறுவதாக மக்கள் கருத்து வெளியிட்டுவருகின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் அமைந்து இருக்கும் யார்க்கரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பானது
ஆலயத்தின் தலைவரான (ஓய்வு பெற்ற கிராம அலுவரும் முழுத்தீவுக்குமான சமாதான நீதவான் ) ஆலயத்தின் நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை தனது சொந்த தேவைக்கா எடுத்துள்ளார்
இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து. நெல்லியடி கொமர்ஷல் வங்கியிலிருந்த பணத்தை எடுத்துள்ளார்கள்.
இதற்கு நிர்வாகமும் உடந்தையாக இருந்துள்ளார்கள் தலைவராக இருந்தவர் கிராமசேவையாளர் ஒரு சமாதான நீதவான்,இதனை விட தமிழ் கட்சி ஒன்றின் முக்கிய உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இருந்து வருகின்றார்.
இதேவளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் உபதலைவர் ,பொருளாளர் தாமகே முன்வந்து பணத்தை வட்டியும் முதலுமாகக் செலுத்தியுள்ளனர்
இம்மோசடிதொடர்பாக நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பது மிகவும் மனவேதனை அளிக்கின்றது.
மேலும் அரசமுத்திரையை போலியாக தயாரித்து (இந்து கலாச்சார உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் கரவெட்டி )அரசையும் மோசடி செய்துள்ளமை குறிப்பிடதக்கது. இம்மோசடிதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராமத்தில் இருந்து மக்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.
வடமாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் நடைபெறும் இவ்வாறான நிதி மோசடிகள் நிர்வாக சிக்கல்களை சரியான முறையில் சீர்செய்ய தவறும் திணைக்களங்கள் தான்ன வடமாகாணத்தில் காணப்படுகின்றன.
வடக்கில் கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,வவுனியா,மன்னார் மாவட்டங்களில் இவ்வாறான ஆலயங்களில் உள்ள பிணக்குகள் பல காணப்பபடுகின்றன இவற்றை சரியான முறையில் விசாரித்து குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் அதனை விடுத்து குற்றம் செய்தவர்களை மூடிமறைக்கும் நடவடிக்கையிலேயே திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுவருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.