70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

விதையனைத்தும் விருட்சமே அமைப்பினால்  முல்லைத்தீவு மாவட்டத்தில்  தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது 

கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் ஆகியன இணைந்து விதையனைத்தும் விருட்சமே என்ற தொனிப் பொருளிலே ஆரம்பிக்கப்பட்ட  செயற்றிட்டத்தில்  தற்போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து பல்வேறு சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் 

அந்த வகையிலே இந்த விதையனைத்தும் விருட்சமே செயல்திட்டத்தின் ஊடாக வருடம் தோறும் அதிர்ஷ்டலாபச் சீட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை கொண்டு வடகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் கற்றல் செயல்பாடுகளுக்காக உதவியை எதிர்பார்த்து இருக்கின்ற மாணவர்களுக்காக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட அதிர்ஷ்டலாப சீட்டுகள் மூலம்  கிடைக்கப்பெற்ற  நிதியின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது 

அந்தவகையில் துணுக்காய் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 24 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (19)  துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது

விதையனைத்தும் விருட்சம் அமைப்பின் முல்லைத்தீவு இனைப்பாளர்   தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலாளர் இ.றமேஸ் துணுக்காய் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு  உத்தியோகத்தர் பு.நேரிந்தன் மற்றும் விதையனைத்தும்  விருட்சமே அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

அதனைத் தொடர்ந்து  மாந்தை கிழக்கு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (19)   மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது

விதையனைத்தும் விருட்சம் அமைப்பின் முல்லைத்தீவு இனைப்பாளர்   தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் இ.றமேஸ் மாந்தை கிழக்கு பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் த.பிரதீப் மாந்தை கிழக்கு பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ரகுநாதன் கஜிந்தன் மற்றும் விதையனைத்தும்  விருட்சமே அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

அதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 31 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (19)   ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்றது

விதையனைத்தும் விருட்சம் அமைப்பின் முல்லைத்தீவு இனைப்பாளர்   தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் திருமதி நிவேகானந்தன் லலிதா சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்   மற்றும் விதையனைத்தும்  விருட்சமே அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

தொடர்ந்தும் 2024 ஆம் ஆண்டுக்கான அதிர்ஷ்டலாப சீட்டுகள் அச்சிடப்பட்டு கடந்த சித்திரைப்  புத்தாண்டு அன்று சீட்டு எழுப்பு முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டு அதிஷ்ட லாப சீட்டு நிதியிலும் மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்

Admin Avatar