முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் நடவடிகைக்கு எதிராக ஒட்டுசுட்டான் பிரதெச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
22.04.2024 இன்று மாலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஊழியர் நலப்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதே செயலத்திற்கு முன்பாக திரண்ட பிரதேச செயகல ஊழியர்கள் அனைவரும் கவனயீர்ப்பினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள்.
ஊடக தர்மத்தினை தனிநபரின் சுயலாபத்திற்கு பயன்படுத்துவதா,கௌரவமான அரச சேவையினை இழிவுபடுத்துவதா,ஊடக தர்மத்தை இழிவு படுத்தாதே,நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்தியமை பிரதேச செயலகத்தின் தவறா?பொதுமக்கள் சேவையினை தனி நபரின் தேவைக்கா கொச்சைப்படுத்தாதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு அரச உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்த அரச ஊழியர்கள்
கடந்த வெள்ளிக்கிழமை 19ஆம் திகதி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த ஞா.சப்த்தசங்கரி என்ற ஊடகவியலாளர் பிரதேச செயலக சூழலை காணொளி எடுத்துள்ளதுடன் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை எந்த அனுமதியும் இன்றி வீடியோ பதிவும் குரல்பதிவினையும் எடுத்துள்ளார்
புகைப்படங்களையும் எடுத்து அவருடைய முகப்புத்தகத்தில் பிரதேசசெயலகத்தின் சேவைகளை அவதூறுப்படுத்தும் வகையில் தவறான செய்தியினை வெளியிட்டார் அது தொடர்பிலான செய்தியினை தொடர்ந்து பல ஊடகங்கள் துறைசார்ந்த உத்தியோகத்தரிடமோ,அல்லது திணைக்கள தலைவர்களிடமோ எந்த விளக்கங்களும் கோராத நிலையில் அந்த செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் சேவைகள் இன்றுவரை சுமூகமாக நடைபெற்று வருகின்றது அவ்வாறான நிலையில் இவ்வாறான சம்பம் இந்த நிலையினை பாதிக்கும் வகையில் ஏற்படுத்தி இருக்கின்றது
ஒட்டுசுட்டான் பிரதேசம் அதிக நிலப்பரப்பினை கொண்ட பிரதேசம் போக்குவரத்துவசதிகள் மிக குறைவாக காணப்படும் பிரதேசத் இருந்த போதிலும் வெளிமாவட்டங்களில் இருந்து பல உத்தியோகத்தர்கள் இங்கு கடமைகளை ஆற்றிவருகின்றார்கள்.
பதவிநிலை உத்தியோகத்தர்கள் தொடக்கம் துறைசார்ந்த உத்தியோகத்தர் வரை வெற்றிடமாக இருக்கின்ற சந்தர்ப்பத்திலும் கூட மக்களுக்கான சேவைகளை சிறப்பாக ஆற்றி வருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் அலுவலகம் தொடர்பில் பொய்யான செய்திகளை வெளிப்படுத்தி பொதுமக்கள் எங்கள் சேவையினை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் இந்த செய்திகள் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஊடகவியலாளர் ஊடக தர்மத்தினை பேணிக்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது எந்த ஒரு தனிநபரின் அனுமதியும் இல்லாமல் அவரை புகைப்படம் எடுப்பது குரல்பதிவு செய்வது என்பது உண்மையாகவே ஊடக தர்மத்திற்கு அப்பாற்பட்ட விடையம் அதனைவிட அந்த தகவலை எந்தவித உண்மைகளையும் இல்லாமல் வெளியிடுவது மோசமான விடையமாக நாங்கள் கருதிக்கொள்கின்றோம்
இவ்வாறான பொய்யான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி மக்களுக்கான சேவைகள் தொடர்ந்து நல்லமுறையில் கிடைப்பதனை தடுப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.