Monday, April 28, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக மு.முபாரக் பரிந்துரை!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக மு.முபாரக் பரிந்துரை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கான செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது.

இந்த வெற்றிடத்தினை நிரப்புவதற்கு மாவட்ட அரசாங்கா அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களல் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளராக கடமையாற்றும் மு.முபாரக் அவர்களை நியமிப்பதற்கான பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றிய சி.ஜெயகாந் கடந்த 01.03.2024 ஆம் திகதி தொடக்கம்முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) திரு.சி. ஜெயகாந்த் கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராகவும் பதில்கடமையாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் அரசியல் பின்னணி ஒன்றின் ஊடாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த அதிகாரியினை நியமன் செய்வதற்கான பரிந்துரை கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார்.

அந்த கடிதத்தில்..
காலியாக உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பதவிக்கு பிரதேச செயலாளர் நியமனம்

மேற்படி விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக பணியாற்றிய சி. ஜெயகாந்தன் மாவட்டச் செயலகத்தின் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் தற்போது வெற்றிடமாக உள்ள மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) பதவிக்கு திரு.ஜெயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பதவியையும் வகித்து வருகின்றார்.

முஹரக் அவர்கள் தற்போது எமது மாவட்டச் செயலகத்தின் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார்.

காலியாக உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் கடமைகளை செய்வதற்கும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பணியை கவனிப்பதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

எனவே வெற்றிடமாகவுள்ள புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பதவிக்கும் முலத்தீவு மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் பதவிக்கும் புதிய பணிப்பாளர் நியமிக்கப்படும் வரை எம்.முபாரக் அவர்களை நியமிக்குமாறு பரிந்துரைக்கிறேன் என கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


??????????????..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments