அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய இழுவைப்படகுகள் வரமாட்டார்கள்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய இழுவைப்படகுகள் வரமாட்டார்கள்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 17.04.24 இன்று மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடிவிட்டு இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய இழுவைப்படகுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரமாட்டார்கள் இந்தியாவில் மீன்களின் இனப்பெருக்க காலகட்டத்தில் தொழிலுக்கு செல்லக்கூடாது என்ற முறை இருக்கின்றது.

இந்திய இழுவைப்படகுள் வருகை தொடர்பில் தொடர்ச்சியான எங்களின் முயற்சிகளுக்கூடாக அவர்கள் இன்று ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் கடற்தொழிலாளர்கள் எல்லைமீறி கடற்தொழிலில் ஈடுபடுவதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்

இந்திய பிரதமர் மோடி அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லியுள்ளார் எல்லைதாண்டி செல்லும் மீனவர்களை தடுப்பதற்காக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க தொழில் நுட்பரீதியான ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லியுள்ளார்

கச்சதீவு பிரச்சினை ஒரு தேர்தல் கோசமாகத்தான் சொல்லமுடியும் இந்தமுறை வித்தியாசம் ஆட்சியில் இருக்கின்ற மத்திய அரசாங்கம் கதைக்கின்றார்கள்.

கச்சதீவினை நாங்கள் பெற்றுக்கொண்டதால் நட்டம்  கச்சதீவினை நாங்கள் பெற்றுக்கொண்டதால் கச்சதீவினை பொல் 80 மடக்கு கடல்வளம் கனிமங்கள் அதிகமான பகுதி (பெஸ்பாங்) என்ற பகுதி இதனை எடுத்ததால் நாங்கள் அதனை இழக்கவேண்டி வந்துள்ளது. கச்சதீவு இது தேர்தலுக்கா சொல்லப்படும் பொய்யான பரப்புரை அதில் எந்த உண்மையும் இல்லை.


இலங்கை இந்திய மீனவர்கள் பேச்சு தொடர்பில்..

தமிழ்நாட்டு முதலமைச்சரும்,பாண்டிச்சேரி முதலமைச்சரும் என்னுடன் கதைக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்  

 அதற்கு நான் அவர்களிடம் எனக்கொரு உத்தரவாதம் தரவேண்டும் என்று கேட்டிருந்தேன் எல்லை தாண்டி சட்டவிரோத தொழில்களில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள் என்ற உத்தரவாதம்.

அப்படி தந்தால் நான் கதைப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றேன் எனக்கு புதுச்சேரி முதலமைச்சரின் அழைப்பிதழ் வந்துவிட்டது 19 ஆம் திகதி தேர்தல் முடிந்;தவுடன் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் இருந்தும் வரலாம் வந்த பின்னர் நான் போவது பற்றி யோசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Admin Avatar