மாணிக்கபுரத்தில் மாட்டு கள்ளன் வசமாக மாட்டிய சம்பவம்!

முல்லைத்தீவு விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் மக்களின் வளர்ப்பு மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்யும் நபர் ஒருவரை கிராமமக்கள் கையும் களவுமாக பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாணிக்கபுரம் பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் பசுமாடுகள் சுமார் 11 பேரின் கால்நடைகள் காணாமல் போயுள்ளன.

இந்த நிலையில் மக்களின் கால்நடைகளை களவாக படித்து தேரவில் பகுதியில் இருக்கும் இறைச்சிமாட்டு வியாபாரி ஒருவருக்கும் கொடுக்கும் திருடன் தொடர்பில் மக்களுக்கு தகவல் தெரியவந்துள்ளதை தொடர்ந்து விழிப்படைந்த கிராம மக்கள் இரவு நேரத்தில் கண்விழித்து மாட்டுக்கள்ளனை கையும் களவுமாக பிடித்துள்ளார்கள்.

09.04.2024 அன்று இரவு வேளை வளர்ப்பு மாடு ஒன்றினை பிடித்து இறைச்சிக்காக கடத்திசெல்லமுற்பட்டுள்ளார் இவர் மாணிக்கபுரத்தில் வசிக்கும் நபர் இரவு நேரங்களில் வீட்டு காணிகளுக்கு முன்னால் நிக்கும் அப்பாவி மாடுகளை பிடித்து இறைச்சிற்கு விற்பனை செய்து வருகின்றமை வழமை இந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்த நடவடிக்கையினால் மாட்டுக்கள்ளன் மாட்டுடன் பிடிக்கப்பட்டு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாட்டுக்கள்ளன் தொடர்பில் பொலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Admin Avatar