முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுனர் இன்று 06.04.2024 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற புதுவை பண்பாட்டு பெருவிழா எனும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் செல்கின்ற இடங்களில் அங்கே இருக்கின்ற பாடசாலை அபிவிருத்தி சங்கள் தங்கள் பாடசாலையில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள்.
இது வடமாகாணத்தில் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது ஆசிரியர் இடம்மாற்றங்களை வலயக்கல்வி அலுவலகங்களும்,கோட்டக்கல்வி அலுவலகங்களும் செய்கின்ற படியால் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் சரியாக கல்விஅமைச்சிற்கு அறிக்கையிடப்படாத நிலை காணப்படுகின்றது
இதனை உடனடியாக மாற்றும் படியும் இதற்கான தரவு தகவல் ஒன்றினை உருவாக்கி சகல பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் சரியாக இருப்பதற்கான நிலமையினை உருவாக்கும் படியும் நான் கல்வி செயலாளரை நேற்று அறிவுறுத்தியுள்ளேன் அதன்படி பாடசாலை அதிபர்களிடம் இருந்து ஆசிரியர்கள் சம்மந்தமான விபரக்கோவை ஒன்றினை கோரும்படியும் நான் தெரிவித்துள்ளேன்.
அதேபோல் சுகாதாரதுறையில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் சுகாதரா அமைச்சுடனும் செயலாளருடனும் பேசியுள்ளோம் அதேபோல் வைத்தியசாலையில் காணப்படுகின்ற சுகாதாரசேவை ஊழியர்கள் வெற்றிடத்தினை தீர்த்துவைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பிப்பதற்கு கௌரவ பிரதம அமைச்சர் அவர்கள் கொள்கையளவில் சம்மதம் தெரிவித்த படியால் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் ஏற்படும்.
தற்போது நாட்டில் தொழில் தகமை உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்ற நிலமை குறிப்பாக வைத்தியத்துறையிலும்,ஆசிரியத்துறையிலும்,தொழில்நுட்ப துறையிலும் பாரிய சிக்கலையும் வெற்றிடங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது இதனை சீர்செய்வது என்பது சரியான சவாலான விடையம்
நாங்கள் நிரப்புவதற்கு தயாராக இருந்தபோதும் இதற்கு தகுதியுடையவர்களை தேடிப்பிடிப்பதென்பது சவாலாக இருக்கின்றது எனவே இந்த நாட்டில் பாலர் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் முடியும் மட்டு இலவச கல்வியினை கற்றுக்கொள்கின்றவர்கள்
மக்களின் வரிப்பணத்தில் இலவச கல்வியினை பெற்றுக்கொள்கின்றவர்கள் எந்தவிதமான கவலையும் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறி செல்வது என்பது இந்த நாட்டின் பொருளாதார சுமையினை மேலும் மேலும் அதிகரித்து செல்கின்ற தன்மையினை ஏற்படுத்தி இருக்கின்றது
போர் நடைபெற்ற காலத்தில் இந்த நாட்டில் இருக்கமுடியாமல் சென்ற புலம்பெயர் உறவுகள் நாட்டிற்கு திரும்பி வந்து இந்த மக்களுக்கும் வாழ் இடங்களுக்கும் தங்களுடைய அர்பணிப்பான சேவைமூலம் பணத்தினையும் நேரத்தினையும் செலவு செய்து சேவையினை வழங்கிக்கொண்டிருப்பது மறக்கமுடியாது.
இந்த பிரதேசத்தின் தேவை என்பது தனித்து அரச நிறுவனங்களினால் மட்டும் செய்யக்கூடியதல்ல இங்கிருக்கின்ற மக்களும் புலம்பெயர் உறவுகளும் ஒரு அர்ப்பணிப்பான சேவையின் ஊடாகத்தான் இன்று சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய சிக்கலை நிரப்ப ஒத்துளைக்கவேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
இந்த ஆண்டில் இரண்டு தடவைகள் இந்த மாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் இந்த ஆண்டு முடிவிற்குள் மாவட்டத்தின் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்படவேண்டும் என்றும் அதற்கான நிலக்கண்ணிகள் முழுமையாக அகற்றப்படவேண்டும் என்றும் அதற்காக 31 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் எங்களுக்கு தெரிவித்திருந்தார்.
சென்றவாரம் அதற்கான கூட்டம் நடத்தியுள்ளோம் அரசாங்க அதிபர்களினால் தெரிவிக்கப்பட்ட பயனாளிகளுக்கு தலா 4மில்லியன் பெறுமதியான 31 ஆயிரம் வீடுகள் வடக்கில் அமைத்து தரப்படும், மலசல கூட வசதிகளுடன் வீட்டிற்கூரைக்கு மேல் சூரிய சக்தி பொருத்தப்படாமல் உங்கள் காணிகள் அமைத்து கொடுக்கப்படும்.
மாங்குளம் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு வைத்தியசாலையினை செயற்படுத்த முடியாத நிலைஇருந்தது அதற்கான ஆளணி சிக்கல் இருந்தது அதனை பெற்றுக்கொள்வதற்கு பலமுறை முயன்றும் இப்போது இருக்கின்ற நிதிப்பற்றாக்குறையால் அதனை செய்வதற்கு தயங்கி இருந்தார்கள்.
ஆனால் நாங்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதி அவரின் செயலாளருக்கு விடுத்த விசேட பணிப்புரையின்காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதற்கான ஆளணி முழுமையாக அனுமதிக்கப்பட்டு தற்போது அந்த வைத்தியசாலை முழுமையாக திறந்துவைப்பதற்கான சாத்தியப்பாடு எங்களுக்கு கிடைத்துள்ளது.
நெருக்கடியான பொருளாதரத்திற்கு மத்தியில் இந்த மாகாணத்திற்கான விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. விசேட அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுகொண்டிருக்கின்றன. என்றும் அவர் தெரிவித்துள்ளார்