தேராவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்! யானை வேலி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
மாலை வேளையிலேயே ஊர்மனைக்குள் வருகின்ற யானைகள் அதிகாலை வரை ஊரில் உள்ள பயன் தர மரங்கள் மற்றும் தோட்ட செய்கைகள் சொத்துக்கள் என பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவதோடு இதனால் தொடர்ச்சியாக தாம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
குறிப்பாக அண்மை நாட்களாக வருகை தந்த யானைகள் தங்களது பயன்தரு தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்களை நாசம் செய்துள்ளதோடு வேலிகளுக்காக போட்ட தூண்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளது இதனால் வீடுகளில் வாழும் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டியுள்ளதோடு இதனால் தமது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
யானை வேலிகள் அமைப்பதாக பல தடவைகள் கூறப்பட்டாலும் இதுவரை அதற்கான எந்த விதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படாமல் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் தமது பகுதிகளுக்கு யானை வேதிகளை அமைத்து யானை தொல்லையிலிருந்து தம்மை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
பல்வேறு இடங்களிலும் யானைகளினால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் உயிராபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பதாக தமது பகுதிக்கு யானை வேலியை அமைத்து தனது பயிர்கள் மற்றும் உடைமைகள் உயிர்களை பாதுகாக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.